ஆபரேசன் செய்து கொண்டிருக்கும் போதே பாலியல் தொல்லை... அப்பல்லோ மருத்துவமனையில் ஐடி பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

By vinoth kumarFirst Published Jun 14, 2019, 1:13 PM IST
Highlights

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.டி. பெண் ஊழியருக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனையின் உண்மை முகம் வெளிவந்துள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.டி. பெண் ஊழியருக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனையின் உண்மை முகம் வெளிவந்துள்ளது. 

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இணையதளத்தில் அலசி ஆராய்ந்து சிறந்த மருத்துவமனையை தேடியுள்ளார். அப்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதாக கேள்விப்பட்டுள்ளார்.  இதனையடுத்து அவர் பெங்களூரில் இருந்து சென்னை பெருங்குடி அப்போலோவில் கடந்த 4-ம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.  

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி கடந்த 6-ம் தேதி அந்த பெண்ணுக்கு இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டு, முகத்தில் செயற்கை சுவாச கருவி பொறுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை அந்த பெண் பார்க்கக் கூடாது என்பதற்காக இடுப்புக்கு மேல் குறுக்காக திரை போட்டு வைத்திருந்தனர். ஒருபக்கம் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க மறுபக்கம் அந்த பெண்ணின் தலைப் பக்கத்தில் நின்றிருந்த லேப் டெக்னீசியன் டெல்லி பாபு என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

 

ஆனால் முகத்தில் செயற்கை சுவாச கருதி பொருத்தப்பட்டு இருந்ததால் இந்த பெண்ணால் சத்தமிட முடியவில்லை. இதனையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னர் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. பாலியல் அத்துமீறல் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்திடம் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அப்போலோ நிர்வாகம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற போது, அந்த பெண் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். 

ஆனால் அந்த பெண் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அப்பல்லோ நிர்வாகமோ தங்களுக்கு வேண்டப்பட்ட இரு போக்குவரத்து போலீசாரை கொண்டு விசாரிப்பது போல நாடகத்தை அறங்கேற்றியுள்ளது. இது குறித்து மீண்டும் காவல் ஆணையருக்கு புகார் அளித்ததால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விசாரிக்க சென்ற துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளரிடம் அந்த பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்று பேசி சமாளித்து உள்ளனர். 

ஆனால், அதனை ஏற்காத காவல் உதவி ஆய்வாளர், அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்தார். இதனையடுத்து பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது லேப் டெக்னீசியன் பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி அந்த பெண் கதறியுள்ளார். இதையடுத்து 6 நாட்கள் கடந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் டெல்லி பாபுவை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பிரபல மருத்துவமனையின் இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

click me!