சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே இந்த பக்கம் போயிடாதீங்க!

Published : Jun 06, 2025, 07:23 AM IST
Traffic Rules

சுருக்கம்

கங்காதீஸ்வரர் கோயில் தேரோட்டத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் மாற்றம்? என்பது குறித்து பார்க்கலாம்.

Traffic Changes in Chennai Today: இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் தலைவலியாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களும் பெருகி விட்டதால் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் இருந்தாலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. இந்நிலையில், சென்னையில் புகழ்பெற்ற அருள்மிகு கங்காதீஸ்வரர் கோயிலின் பிரமாண்டமான தேரோட்ட விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கங்காதீஸ்வரர் கோயில் தேரோட்டம்

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், '' கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் கோயிலின் பிரமாண்டமான தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை, 06.06.2025 அன்று காலை 05.00 மணி முதல் நடைபெறும். இந்த ஊர்வலம் ஆனது கங்காதீஸ்வரர் கோயில் நுழைவாயில் (தொடங்கும் இடம்) கங்காதீஸ்வரர் கோயில் வீதி வழியாக சென்று டாக்டர் அழகப்பா ஆடியப்பா தெரு, வெள்ளாள தெரு - புரசைவாக்கம் நெடுஞ்சாலை வெல்கம் ஹோட்டல் சந்திப்பு – கங்காதீஸ்வரர் கோயில் நுழைவு வாயில் (நிறைவு பெறும் இடத்தின்) வழியாக நடைபெறும்.

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் சீரான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் வாகனப் பயனர்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களானது இன்று வெள்ளிக்கிழமை, 06.06.2025 அன்று காலை 06:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

1. முதலில் டவுட்டன் சந்திப்பில் இருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் ரிதர்டன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு ஈ.வி.ஆர். சாலை சென்று தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

புரசைவாக்கம் நோக்கி வரும் வாகனங்கள்

2. அதேபோல் புரசைவாக்கத்தில் இருந்து கங்காதீஸ்வரர் கோவில் தெரு நோக்கி வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை, டவுட்டன் சந்திப்பு, ரிதர்டன் சாலை, ஈ.வி.ஆர். சாலை வழியாக சென்று தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

3. அடுத்தபடியாக எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து ஈ.வி.ஆர் சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் தாசபிரகாஷ் சந்திப்பில் அழகப்பா சாலை நோக்கிச் செல்வதற்கு தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக அவர்கள் நேராக தங்கள் இலக்கை அடைய EGA சந்திப்பு, வாசு தெரு, பர்னபி சாலை, மில்லர்ஸ் சாலை வழியாக சென்று தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

கெல்லிஸ் சந்திப்பு, ஓர்ம்ஸ் சாலை

4. இதற்கு அடுத்தப்படியாக பெரம்பூரில் இருந்து பிரிக்லின் சாலை வழியாக புரசைவாக்கம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் கெல்லிஸ் சந்திப்பு, ஓர்ம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோயில் சந்திப்பு, ப்லோவேர்ஸ் சாலை, ஈ.வி.ஆர் சாலை சென்று தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை

5. இதற்கு அடுத்ததாக வெள்ளாள தெரு, ஆடியப்ப தெரு வழியாக தேர் ஊர்வலத்தின் போது வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

6. தேர் ஊர்வலம் செல்லும் பாதையில் எந்த வாகனங்களையும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!