சென்னை வாகன ஓட்டிகளே தப்பி தவறி கூட 2 நாட்களுக்கு இந்த பக்கம் போயிடாதீங்க.. அப்புறம் கஷ்டம் தான்.!

By vinoth kumar  |  First Published Mar 9, 2024, 6:41 AM IST

சென்னை மெட்ரோ நிலையங்களின் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மெட்ரோ பணி காரணமாக இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை மெட்ரோ நிலையங்களின் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: School College Holiday: குட்நியூஸ்! வரும் 11-ம் தேதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!

* சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு ஹாடோஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

* இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள். உத்தமர் காந்தி சாலை டாக்டர் எம்ஜிஆர் சாலை (KH Road) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அமைந்தக்கரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (LeftTurn) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.

* வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஸ்டெர்லிங் சாலை உத்தமர் காந்தி சாலை (NH Road) வழியாகத் திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.

* மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து மாற்றப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்து காவல்துறை ததரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மகள் சாதி மறுப்பு திருமணம்.! மருமகனை ஆணவக் கொலை செய்ய ஸ்கெட்ச்.! சிக்கிய தங்கை.! நடந்தது என்ன?

click me!