இனி தக்காளி சாதம் எல்லோரும் செய்யலாம் ..சதமடித்த நிலையில் விலை குறைந்தது தக்காளி..! | Tomato price

By Thanalakshmi VFirst Published Nov 25, 2021, 2:42 PM IST
Highlights

தமிகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை, வரத்து அதிகரிப்பாலும் பசுமை பண்ணைகளில் விற்பனை தொடங்கியதாலும் குறைய தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தக்காளின் விலை சதம் அடைத்த நிலையில் , கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளில்  தக்காளி கிலோவிற்கு ரூ. 30 க்கு குறைந்து ரூ.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது. மேலும் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி காய்கள் அழுகின. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்த காரணத்தால் விலை உச்சத்திற்கு சென்றது.  இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.  
அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.  இதன் படி , தழிழகம் முழுவதும் 69 பசுமை பண்ணைகளில் தக்காளி குறைந்த விலை விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக , சென்னையில் மட்டும் 40 கடைகள் இயங்கின. மேலும் மக்களின் பலரும் வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் நகர்புற மற்றும் அதனை சுற்றியுள்ள குறிப்பிட்ட சில நியாய விலை கடைகளிலும் தக்காளி, காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்திருந்தார். அதற்கான விலை பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே சமயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று லாரிகளில் வரத்து அதிகரித்ததால், தக்காளியின் விலை கிலோவுக்கு 30 யிலிருந்து 40 ரூபாய் வரை குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.30 குறைந்தது. நேற்று முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.30 குறைந்து,  கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையாகிறது. இதேபோல், 2-ம் ரக தக்காளி ரூ.100ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70க்கு விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று 30 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து, இன்று 45 லாரிகளாக உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து மேலும் அதிகரிப்பது மூலம், அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இனி வரும் நாட்களில் வரத்து அதிகரித்தால் தக்காளி விலை மேல்உம் குறையும் என வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
 

click me!