1 வாரத்திற்கு பிறகு பெட்ரோல் விலையில் சடன் பிரேக்.. நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்!!

By Manikandan S R SFirst Published Sep 25, 2019, 10:56 AM IST
Highlights

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று உயர்த்தப்படவில்லை.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. தினமும் 25 காசுகளுக்கு மேல் விலை உயர்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் 1 வாரத்திற்கு பிறகு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை 77.06 ரூபாயாக இருக்கிறது. அதே போல 1 லிட்டர் டீசல் விலை 70.91 ரூபாயாக காணப்படுகிறது. இது நேற்றைய விலை தான். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்கபட்டு வந்தது. அது மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

click me!