மின் இணைப்பு வேண்டுமா?... உங்க வீட்டில் இந்த கருவி இருப்பது கட்டாயம்.... மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 6, 2021, 2:02 PM IST
Highlights

வீடு, கடை, தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகளில் உள்ள மின்இணைப்புகளில் உயிர் காக்கும் கருவியை பொருத்த வேண்டும் என்றும், கருவி இருந்தால்தான் மின் இணைப்பபு வழங்கப்படும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் மின் இணைப்புகளில் ஆர்சிடி என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளிலும், தற்காலிக மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி.  என்ற ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


* அதேபோல 10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவ கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகளில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி. சாதனத்தை பொருத்த வேண்டும்.


* மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி. சாதனத்தை பொருத்த வேண்டும். இதன்மூலம் அந்தந்த கட்டிட பகுதியில் உள்ள மனிதர்கள் மின் பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியில் இருந்து காக்கப்படுவார்கள். 

* மின்விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

* தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி. சாதனத்தை பொருத்த வேண்டும். அத்தகைய அமைப்பினால், அந்தந்த கட்டிடப்பகுதியில் உள்ள மனிதர்கள், அந்தந்தப்பகுதியில் உண்டாகும் மின்பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள்.

* புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில் நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை பொருத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தாத பட்சத்தில், மின்னிணைப்பு வழங்கப்படமாட்டாது.

 

* மின்விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டுமென்பது இவ்வாணையத்தின் நோக்கமாகும். இந்த சட்டப்பூர்வமான வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

click me!