மக்களே உஷார்... இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 16, 2021, 1:50 PM IST
Highlights

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள். புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கைவிடுக்கப்படுள்ளது. 


நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 19.07.2021,20.07.2021 மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய நீலகிரி,  கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):வால்பாறை (கோவை), பந்தலூர் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 9, சின்கோனா (கோவை) 7, அவலாஞ்சி (நீலகிரி) 6, பெரியாறு (தேனி) 4, நடுவட்டம் (நீலகிரி) 3, கொடைக்கானல், தலைஞாயிறு (நாகப்பட்டினம்), தென்காசி தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நாகுடி (புதுக்கோட்டை), சூளகிரி (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தர்மபுரி), திருப்பத்தூர், தாளவாடி (ஈரோடு), உடுமல்பேட்டை (திருப்பூர்) தலா1 மழையும் பதிவாகியுள்ளது. 

வங்க கடல் பகுதிகள்: 18.07.2021 முதல் 20.07.2021 வரை: தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை  இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், ஜூலை 20 அன்று,  மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்,  தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 20ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்வ வேண்டாமென  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

click me!