சென்னை பல்கலைக்கழகம் பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு வளமான கலாச்சாரம் மற்றும் நாகரிகம் கொண்டது எனவும் திருக்குறள் பல நூற்றாண்டுகளாக அனைவரது வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக உள்ளது எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
தமிழக வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) இரவே சென்னை வந்துவிட்டார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கிய அவருக்கு இன்று காலை முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் தொட்டிலாக விளங்கி வருகிறது. சங்க கால இலக்கியத்தின் மரபு வழி, இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் பாதுகாக்கப்பட்ட மாபெரும்…
வரவேற்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் காலை 10.15 மணிக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் பேராசிரியர் கௌரி ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
திறக்கப்பட்ட கர்நாடக அணைகள்... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, "தமிழ்நாட்டின் கோயில்கள் கட்டிட கலை, சிற்பக்கலை போன்ற மனித குலத்தின் திறமைகளுக்குச் சான்றாக அமைந்துள்ளன. திருக்குறள் பல நூற்றாண்டுகளாக நமது அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், விவி கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.
விழாவின்போது தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கும் தரவரிசையில் முதலிடம் பெற்றவர்களுக்கும் பட்டம் மற்றும் பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர், "சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் தொட்டிலாக விளங்கி வருகிறது. சங்க கால இலக்கியத்தின் மரபு வழி, இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் பாதுகாக்கப்பட்ட மாபெரும் ஞானம், பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப் 7இல் இந்தியா வருகை: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்