வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. தமிழகத்திற்கு வானிலை மையம் எச்சரிக்கை!!

By Asianet TamilFirst Published Sep 4, 2019, 12:11 PM IST
Highlights

அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கேரளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை போல இந்த வருடமும் கடுமையான மழை பெய்து மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் அடுத்த 3 நாடுகளுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா, தெலுங்கானா,சத்திஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களின் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தற்போது நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!