ராஜ்யசபா தேர்தலில் சீட் கிடைக்காதது வேதனை… - மைத்ரேயன் பரபரப்பு பேட்டி

By Asianet TamilFirst Published Jul 27, 2019, 12:52 AM IST
Highlights

ராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இது எனக்கு வேதனை அளிக்கிறது என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கூறினார்.

ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் நேற்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தேன். ஜெயலலிதாவின் பணிகளை கட்டளைகளாக ஏற்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவரின் தூதராக இருந்து செயல்பட்டு வந்தேன். நாடாளுமன்ற பதவி நிறைவுக்கு வந்தது. இதனால், சென்னைக்கு வந்ததும் என்னுடைய முதல் கடமையாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சல் செலுத்தினேன்.

மக்களவை தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பினேன். எனக்கு வாய்ப்பு தரவில்லை. ஜெயலலிதாவால் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மக்களவையிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு நிச்சயமாக இருக்கிறது. கட்சியில் எனக்கு கிடைக்கும் முக்கியத்தும் குறைந்தது குறித்து காலம் பதில் சொல்லும்.

ஜெயலலிதாவின் ஆட்சி தற்போது நடக்கிறதா என்பதை தேர்தல் வரும் போது தமிழக மக்கள் வெளிப்படுத்துவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் காரணமாக வெற்றி பெற்று வந்தவர்கள். எனவே, அந்தவகையில் ஜெயலலிதாவின் ஆட்சி தான் நிச்சயமாக நடக்கிறது. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என இரண்டிலும் சாதக, பாதகங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பலரது மனதிலும் எதிரொலிக்கிறது. அது எனது மனதிலும் எதிரொலிக்கிறது என்றார்.

click me!