குளிர்பானம் குடித்து பஸ்சில் மயங்கிய சென்னை சிறுவன் தாயின் மடியில் பலி.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்.!

Published : Aug 24, 2022, 12:22 PM IST
குளிர்பானம் குடித்து பஸ்சில் மயங்கிய சென்னை சிறுவன் தாயின் மடியில் பலி.. நெஞ்சில் அடித்து கதறிய பெற்றோர்.!

சுருக்கம்

பேருந்தில் பயணம் செய்த போது குளிர்பானம் வாங்கி குடித்த  சென்னையை சேர்ந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பேருந்தில் பயணம் செய்த போது குளிர்பானம் வாங்கி குடித்த  சென்னையை சேர்ந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மயிலாப்பூர் பிவிகே தெருவை சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் மகன் அந்தோணி ஜான் லோஷன் (14). இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், குடும்பத்தாருடன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை மீண்டும் சென்னைக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மதுரை பேருந்து நிலையம் அருகே பேருந்து நின்றபோது அங்கிருந்த ஒரு கடையில் சிப்ஸ் மற்றும் பாட்டில் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட மாணவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உறவினர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். பின்னர் விக்கிரவாண்டி அருகே பேருந்து வந்தபோது சிறுவனை எழுப்பியதில் எந்தவித சுயநினைவுமின்றி இருந்துள்ளார். திண்டிவனம் பேருந்து நிறுத்தத்தில் சிறுவனை எழுப்பிய போது இரண்டு முறை பெருமூச்சு விட்டுள்ளார். அதன் பிறகு, வேறு எந்தவித அசைவும் இல்லாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பேருந்தில் கதறி அழுதுள்ளனர்.

இதனை அறிந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு மாணவனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குளிர்பானம், சிப்ஸ் சாப்பிட் டதால் புட்பாய்சன் ஏற்பட்டு மாணவன் இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!