#BREAKING அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குஷியான செய்தி.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 28, 2021, 4:54 PM IST
Highlights

மே 1ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மே 1ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் அலுவல் பணிகள் காரணமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வரவேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்;- மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டும். 

மற்ற வகுப்பு மாணவர்கள் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டு தயாரிப்புக்காக மே மாதம் இறுதியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!