TASMAC: மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!

Published : Feb 15, 2022, 10:15 AM IST
TASMAC: மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..  இந்த 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!

சுருக்கம்

வழக்கத்தைவிட அதிக அளவில் மது வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் இன்றும் நாளையும் மதுக்கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.02.2022 அன்று காலை 10 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், இந்த பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மதுக்கடைகளில் இன்றும் நாளையும் மது விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வழக்கத்தைவிட அதிக அளவில் மது வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் இன்றும் நாளையும் மதுக்கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!