டாஸ்மாக் கடைகளில் இனி ஒரே ஜாலிதான்... குஷியில் குடிமகன்கள்..!

By vinoth kumarFirst Published Apr 29, 2019, 1:09 PM IST
Highlights

குடிமகன்களுக்கு கூலிங் பீர் கிடைக்க வசதியாக டாஸ்மாக் கடைகளுக்கு 2 ஆயிரம் புதிய குளிர் சாதன பெட்டிகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. 

குடிமகன்களுக்கு கூலிங் பீர் கிடைக்க வசதியாக டாஸ்மாக் கடைகளுக்கு 2 ஆயிரம் புதிய குளிர் சாதன பெட்டிகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணி, மதுரை ஆகிய இடங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. இதேபோல், திருச்சி 102 டிகிரி, சேலம், பாளையங்கோட்டை, கரூர் 100 டிகிரி, சென்னை 95 டிகிரி வரையிலும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால், சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. 

வெயில் காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீரையே அதிகம் கேட்டு வாங்குகின்றனர். ஆனால், டாஸ்மாக் கடைகளில் உள்ள ஃபிரிட்ஜ்கள் பழையதாகவும், பல ஃபிரிட்ஜ்கள் பழுதானதாகவும் இருந்ததால் கூலிங் பீர் கொடுக்க முடியாத நிலைக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் தள்ளப்பட்டனர். இதனால், குடிமகன்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. மேலும், விற்பனையும் வெகுவாக குறைந்து காணப்பட்டது. பீர் விற்பனையை பொருத்தவரையில் மழை காலத்தை விட வெயில் காலத்தில் தான் அதிகரிக்கும். எனவே, பழைய ஃபிரிட்ஜ்களை ஓரங்கட்டிவிட்டு புதிய ஃபிரிட்ஜ்களை கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் இருந்து நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்தின் தரப்பில் பழுதாகி செயல்படாத ஃபிரிட்ஜ்கள் உள்ள கடைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் கணக்கெடுக்கப்பட்ட கடைகளுக்கு ஃபிரிட்ஜ்களை வழங்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக 2 ஆயிரம் புதிய ஃபிரிட்ஜ்களை டாஸ்மாக் நிர்வாகம் இறக்குமதி செய்திருந்தது. தற்போது இதை முழுவதுமாக டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கும் பணி முடிவடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்‘கூலிங் பீர்’ கிடைப்பதால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

click me!