கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பலனடையும் வண்ணம், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 9 ஆண்டுகளில், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு 113% மற்றும் முழு கொப்பரைக்கு 118% விலை உயர்த்தியிருப்பது, கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, நமது மாண்புமிகு பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள முயற்சிகளை வெளிக்காட்டுகிறது.
undefined
கடந்த 2023 ஆம் ஆண்டை விட, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.300 மற்றும் முழு கொப்பரைக்கு ரூ.250 என, 2024 ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ள இன்றைய அறிவிப்பால், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலை, உடைக்கப்பட்ட கொப்பரைக்கு 113% மற்றும் முழு கொப்பரைக்கு 118% விலை உயர்த்தியிருப்பது, கடினமாக உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, நமது மாண்புமிகு பிரதமர் திரு அவர்கள்…
— K.Annamalai (@annamalai_k)விவசாயிகள் பலனடையும் வண்ணம், கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 66 ஐ நிறைவேற்றவும், தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..