200 கவுன்சிலர்களுக்கும் டேப் கணினி.. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா.. இலவச ஷூ! மேயர் பிரியா அசத்தல் அறிவிப்பு!

By vinoth kumar  |  First Published Feb 21, 2024, 1:42 PM IST

சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா வாசித்தார். அதில், 82 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 



சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கு என பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா வாசித்தார். அதில், 82 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி, 2 ஜோடி காலுறை வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு

*  255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு

*  சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 419 சென்னை பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு தன் விவரக்குறிப்பினை அறிந்து கொள்ளவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை(ID Card) வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு 

*  எல்கேஜி முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா இரண்டு சீருடை வழங்க ரூ.8.50 கோடி ஒதுக்கீடு 

*   தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு 

*  ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு

*  அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் பயன்பெறும் விதமாக 10 வட்டாரங்களுக்கு தலா ஒரு ஆலோசகர் வீதம் 10 ஆலோசர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமித்து மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். இதற்காக ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  419 சென்னை பள்ளிகளை உடனடியாக பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

*  சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான  பட்ஜெட்டில் ரூ.1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

*  338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

*  சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

*  வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது.

*  200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

*  சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

*  சென்னை பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று மீண்டும் சென்னை பள்ளிகளிலேயே தொடர்ச்து 11ம் வகுப்பு சேர்ந்து பயிலும் 50 மாணாக்கர்களை (ISRO)போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

click me!