கொலையை இங்கு செஞ்சிட்டு! வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது! குற்றவாளிகளுக்கு சரியான ஆப்பு வைத்த நீதிபதி!

By vinoth kumar  |  First Published Mar 9, 2024, 7:26 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக ஆராமுதன் இருந்து வந்தார். இவர் மீது கடந்த 29ம் தேதி அவரது காரை வழிமறித்து மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. 


கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக ஆராமுதன் இருந்து வந்தார். இவர் மீது கடந்த 29ம் தேதி அவரது காரை வழிமறித்து மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: சென்னையில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம்! திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி ரோட்டில் இழுத்து போட்டு கொலை!

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய அடைய வேண்டும். வேறு நீதிமன்றங்களில் சரணடைய முடியாது. எனவே, சத்தியமங்கலம் நீதிமன்றம் இவர் சரணடைந்ததை ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், சம்பந்தப்பட்ட வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. மேலும், சரணடைவது தொடர்பாக சில வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்துக்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை யாரேனும் சரணடைந்தால் அவரை சிறையில் அடைக்க குறிப்பிட்ட நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

இதையும் படிங்க: பெங்களூரு.. கழிவறையில் கூட தண்ணீர் இல்லை - மால்களை நோக்கி படையெடுக்கும் குடியிருப்பு வாசிகள்!

அவ்வாறு ஒருவர் சரணடையும் நிலையில் குறிப்பிட்ட மாஜிஸ்ட்ரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை உயர்நீதிமன்ற பதிவாளர், தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

click me!