சுபஸ்ரீ பலியான வழக்கு... அதிமுக பிரமுகரை மருத்துவமனையில் வைத்து தூக்க போலீஸ் திட்டம்..!

By vinoth kumarFirst Published Sep 15, 2019, 1:32 PM IST
Highlights

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் இருக்கும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகரின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் இருக்கும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேனர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில், போலீசார் செய்த வழக்குப்பதிவில், பேனர் வைத்தவர் பெயரை ஏன் சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. யாரிடம் அனுமதி வாங்கிவிட்டு அங்கு பேனர்கள் வைக்கப்பட்டது. பேனர்கள் வைத்தவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.

இதனையடுத்து, சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!