சுபஸ்ரீ மரண விவகாரம்... இருதலை கொள்ளியாய் திணறும் தமிழக போலீஸ்..!

Published : Sep 27, 2019, 12:20 PM IST
சுபஸ்ரீ மரண விவகாரம்... இருதலை கொள்ளியாய் திணறும் தமிழக போலீஸ்..!

சுருக்கம்

சென்னை பள்ளிக்கணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் விரைந்துள்ளனர். 

சென்னை பள்ளிக்கணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் விரைந்துள்ளனர். 

முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுதொடர்பான வழக்கில் சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இப்போது, ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு காவல்துறை சார்பில், கடந்த 20-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக ஜெயகோபாலின் தொலைபேசி சிக்னலை வைத்து, ஒகேனக்கல் மற்றும் திருச்சி பகுதிக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!
Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்