சுபஸ்ரீ பேனர் விவகாரம்... அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Sep 28, 2019, 11:40 AM IST
Highlights

உயிர்பலி ஏற்பட காரணமாக இருந்து சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பலாம் என தப்பு கணக்கு போட்டு 15 நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சாலையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட  பேனர் சரிந்து விழுந்து பெண் மென்பொறியாளர் இறந்த வழக்கில் 15 நாட்களாக தலைமறைவாக இருந்த,  அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், நேற்று கைது செய்யப்பட்டார்.  இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிபதி ஸ்டார்லி உத்தவிட்டார். இதனையடுத்து நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். 

'உயிர்பலி ஏற்பட காரணமாக இருந்து சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பலாம் என தப்பு கணக்கு போட்டு 15 நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்' என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 'கடும் தண்டனை கொடுத்தால் தான், விதிகளை மீறி பேனர்கள் வைக்கும் கலாசாரம் முடிவுக்கு வரும். அதுபோன்ற பேனர்கள் வைப்போருக்கு எச்சரிக்கையாகவும் அமையும். அடுத்தடுத்து, உயிர் இழப்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்' என்கின்றனர்

click me!