தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்.. வானிலை மையம் தகவல்..!

By vinoth kumarFirst Published May 31, 2020, 3:41 PM IST
Highlights

லட்சத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

லட்சத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. இதனால் ஜூன் 5ம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் இந்த வருடம் ஜூன் 5ம் தேதி தான் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், நாளையே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அரபிக்கடலில் உருவாகும் இந்த புயலால் நேரடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்ற போதிலும், பருவமழையை தாமதப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

click me!