எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது..! எஸ்.பி.பி சரண் வெளியிட்ட தகவல்!

Published : Aug 27, 2020, 05:54 PM ISTUpdated : Aug 27, 2020, 05:56 PM IST
எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது..! எஸ்.பி.பி சரண் வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி முதலே இவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.  

இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என, ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதே போல் இன்றும் 6 மணி முதல் 6 :05 மணிவரை எஸ்.பி.பிக்காக கூட்டு பிராத்தனை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின், பிராத்தனைக்கு கிடைத்த பலனாக... நாளுக்கு நாள் எஸ்.பி.பி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. அதே போல், எஸ்.பி.பியின் மகன் சரணும் அணைத்து மொழி ரசிகர்களும் புரியும் வகையில் ஆங்கிலத்தில், தன்னுடைய தந்தை உடல் நிலை குறித்த அப்டேட் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினமே, இன்று எஸ்.பி.பி.சரண் அப்பாவின் உடல் நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் நுரையீரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைக்கிறார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார். 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குக்குள் உடல் நிலை முழுவதுமாக குணமடையும் என்று எதிர்பார்க்கிறோம் என மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து இன்று எஸ்.பி.பி.உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள சரண், நல்ல முன்னேற்றத்துடன் அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு