விமானத்தில் மின்கசிவால் தீப்பொறி... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 170 பயணிகள்..!

Published : May 20, 2019, 11:10 AM ISTUpdated : May 20, 2019, 11:12 AM IST
விமானத்தில் மின்கசிவால் தீப்பொறி... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 170 பயணிகள்..!

சுருக்கம்

திருச்சியில் இருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 170 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 170 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். 

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் 170 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை