TN Schools: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை சொன்ன முக்கிய தகவல்..!

Published : Feb 21, 2022, 05:21 AM ISTUpdated : Feb 21, 2022, 05:25 AM IST
TN Schools: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை சொன்ன முக்கிய தகவல்..!

சுருக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு கடந்த 18ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இன்று  மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு கடந்த 18ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் பள்ளிகளுக்கு விடுமுறையானது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வரும் 22ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிக்கு சென்ற 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்படுமோ என்ற எண்ணம் ஆசிரியர்கள் மத்தியிலும் இருந்து வந்தது.

இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மிழகத்தில் நாளை வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற பள்ளிகள் அனைத்து வழக்கம்போல்  செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!