அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. எதுக்குன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.!

By vinoth kumarFirst Published Feb 18, 2022, 11:49 AM IST
Highlights

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களும் தேவையான மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும், நோயைக் கண்டறியும் சோதனைகளைச் செய்து கொள்ளவும், நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளுக்காகவும் தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

தமிழக அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களும் தேவையான மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும், நோயைக் கண்டறியும் சோதனைகளைச் செய்து கொள்ளவும், நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளுக்காகவும் தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு குடும்பத்துக்கு ஓர் அட்டையென அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்று வந்தது.

இந்நிலையில், கொரோனா பேரிடரின்போது மருத்துவச் செலவுகள் அதிகரித்ததையடுத்து, அரசு ஊழியர்களின் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு கொரோனா சிகிச்சை செலவு 10 லட்சத்துக்கும் மேல் உயர்ந்தால், அந்தச் செலவை அரசு வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அரசு ஊழியர்களின் இந்தக் கூடுதல் சிகிச்சை செலவுக்காக ஒரு கோடியை சுழல் நிதியாகக் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்தச் சலுகை, வாரிய ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பொது நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!