காங்கிரசை ஆட்சியில் அமர வைத்த மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்.! திருவள்ளூரில் எம்பி பதவியை தட்டிப்பறிப்பாரா.?

By Ajmal KhanFirst Published Mar 24, 2024, 8:04 AM IST
Highlights

கர்நாடாகவில் அசுர பலத்தில் இருந்த பாஜக ஆட்சியை அகற்ற முக்கிய நபராக இருந்த சசிகாந்த் செந்திலுக்கு, தமிழகத்தில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என தற்போது பார்க்கலாம். 

அரசியல் களத்தில் மாஜி ஐஏஎஸ்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து பிரச்சார களத்தில் இறங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எப்போதும் போல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறியாகவே இருந்தது. இந்தநிலையில் கடைசியாக 9 பேர் கொண்ட பட்டியலில் வெளியிட வேண்டிய நிலையில், தற்போது 7 பேர் கொண்ட பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக முன்னாள் எம்பிக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்  சசிகாந்த் செந்தில்  அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 

யார் இந்த  சசிகாந்த் செந்தில்.?

யார் இந்த  சசிகாந்த் செந்தில் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கர்நாடாகவில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்ற முக்கிய நபராக திகழ்ந்தவர் தான் இந்த  சசிகாந்த் செந்தில், கர்நாடவில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த  சசிகாந்த் செந்தில், தமிழகத்தில் திருவள்ளூர் தொகுதியை கைப்பற்றுவாரா என்பதை தற்போது பார்க்கலாம்.   தற்போது திருவள்ளூர் தொகுதி எம்பியா காங்கிரஸ் கட்சியின் டாக்டர் கே ஜெயக்குமாருக்கு பதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். இது தவிர பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

இதன் காரணமாக கர்நாடக மக்களின் கோரிக்கைகள் என்னவன்று முழுமையாக அறிந்திருந்தார். அப்போது தான் செந்தில், “தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்ற காரணத்தை முன்வைத்து ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகினார். மேலும் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் சசிகாந்த் செந்தில். கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து தான் கர்நாடக மாநில  வார் ரூம் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார். 

அண்ணாமலைக்கு செக் வைத்த சசிகாந்த் செந்தில்

கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட நிலையில், அதற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டவர் தான் சசிகாந்த் செந்தில், மாஜி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற போரில்  ச்சிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் நன்மதிப்பை பெற்ற அவருக்கு காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில் தான்  சசிகாந்த் செந்திலின் பெயர் தமிழக காங். வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தமிழக மக்களின் கவனம் ஈர்த்துள்ளது.

திருவள்ளூர் தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி.?

சசிகாந்த் செந்திலுக்கு போட்டியாக திருவள்ளூர் (தனி) தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.பால கணபதி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் எம்.பி.யும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவிடம் பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதே போல அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு சீட் ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூரில் முன்னாள் எம்.எல்.ஏ கு.நல்லதம்பி போட்டியிடவுள்ளார். எனவே இந்த தேர்தலில் திருள்ளூரில் சசிகாந்த் செந்திலின் வெற்றி வாய்ப்பு கை ஓங்கியுள்ளதாகவே கள நிலவரம் தெரிவிக்கின்றது. 

இதையும் படியுங்கள்

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி!

click me!