முழு ஊரடங்கை நோக்கி நகரும் தமிழகம்? கிராம புறங்களில் சலூன் கடைகள் இயங்க தடை..!

By vinoth kumarFirst Published May 4, 2021, 10:45 AM IST
Highlights

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. 

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டும், வரும் மே 6ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, நல்வி, கலாச்சா நிகழ்வுகள் மற்றும் இதா விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையாங்குகள் செயல்படாது.

ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுபதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், பெரிய மால்கள், பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மெல்ல மெல்ல ஊரடங்கை நோக்கி தமிழகம் நகருவதாகவே பார்க்கப்படுகிறது. 

click me!