சுயஉதவி குழுக்களுக்கு ரூ.900 கோடி கடன் - சென்னை மாநகராட்சி திட்டம்

Published : Jul 28, 2019, 06:51 AM IST
சுயஉதவி குழுக்களுக்கு ரூ.900 கோடி கடன்  - சென்னை மாநகராட்சி திட்டம்

சுருக்கம்

2019 - 2020 ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.900 கோடி கடன் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

2019 - 2020 ஆண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.900 கோடி கடன் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சென்னை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக வங்கிகளின் மூலம் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் இணைப்பு ஏற்படுத்தி தருதல், வட்டி மானியம் பெற்று தருதல் ஆகிய பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் செயல்பட்டுவரும் மகளர் சுய உதவி குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் சுய தொழில் தொடங்க பல்வேறு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி தற்போது 2285 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.105 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை மாநகராட்சி பகுதிக்குப்பட்ட 853 மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரூ. 33 கோடி கடன் வழங்கினார்.

இதில் மாநகராட்சி இணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி ) லிலதா, துணை ஆணையர் (கல்வி ) குமாரவேல் பாண்டியன், மகளிர் திட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 2019 - 2020 நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 900 கோடி கடன் வழங்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?