மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் புதிய அபராதம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் இதர அவரசகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் புதிய அபராதம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், உயிர் காக்கும் வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் செல்லும் போது வழிவிடத் தவறினாலோ, அல்லது இடையூறு ஏற்படுத்தினாலோ ரூ.10,000 அபதாரம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 20 பேர் படுகாயம்..!
undefined
அதேபோல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 5000 ரூபாய் இருந்த அபராத தொகை 10,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினாலும் 10,000ஆக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. தேவையின்றி ஓலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ.1,000 அபதாரம் விதிக்கப்படும்.
குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இதுவரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வாகன ஓட்டுனர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மது குடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மது குடித்து இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு