Diwali : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? அப்படினா உங்க ஊருக்கு போகும் பஸ் எங்கு நிற்கும் தெரியுமா?

By vinoth kumarFirst Published Oct 20, 2022, 9:38 AM IST
Highlights

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக தற்காலிகமாக 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக தற்காலிகமாக 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக தமிழக அரசு சார்பில் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக சென்னையில் 6 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 

*  கோயம்பேடு பேருந்து நிலையம்:

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி,ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் 

*  மாதவரம் பேருந்து நிலையம்:

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

*  கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையம்

ECR வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் புறப்படும்.

*  தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

*  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்:

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருத்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள்., திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.

* பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்:

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!