
மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி கணவன் கண் முன்னே கர்ப்பணி மனைவி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்(25). இவரது மனைவி ஐஸ்வர்யா(22). தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். பட்டமந்திரி பகுதிக்கு சென்றுவிட்டு, தனது கணவர் அஜித்துடன் இருசக்கர வாகனத்தில் ஐஸ்வர்யா மீஞ்சூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் சாம்பல் கழிவுகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி அஜித் ஓட்டிசென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அஜித் தூக்கி வீசப்பட்டும், ஐஸ்வர்யா லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த பார்த்து கதறி அழுதார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஜித்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும் உயிரிழந்த ஐஸ்வர்யா சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கணவர் முன்னே 3 மாத கர்ப்பிணிப் பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.