உண்மையிலேயே சென்னையில் நில அதிர்வு? மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.. பீதியில் பொதுமக்கள்.!

By vinoth kumar  |  First Published Feb 22, 2023, 1:42 PM IST

சென்னை அண்ணாசாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை. நிலஅதிர்வு உணரப்பட்ட இடங்களில் எவ்வித மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெறவில்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


சென்னை அண்ணாசாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சென்னையில் இன்று காலை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டிடத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனையடுத்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அலறியபடி வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.  நிலஅதிர்வு உணரப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.  

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் திடீர் நிலநடுக்கம்? அலுவலகத்தில் இருந்து அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்.. சாலையில் தஞ்சம்.!

undefined

அப்போது, அண்ணாசாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியின் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், மெட்ரோ பணிகளால் நில அதிர்வு  ஏற்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  கேடு கெட்ட பாஜவுக்கு ஜால்ரா அடிக்கும் அதிமுக! அது ஆடியோ, வீடியோ கட்சி! பரப்புரையில் பட்டையை கிளப்பும உதயநிதி.!

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கூறுகையில்;- சென்னை அண்ணாசாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை. நிலஅதிர்வு உணரப்பட்ட இடங்களில் எவ்வித மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெறவில்லை. உண்மையிலேயே நில அதிர்வு உணரப்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் மட்டுமே சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை.

click me!