ரேபிட் டெஸ்ட் கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை... தமிழகம் 3ம் நிலைக்கு செல்லும் அபாயம்...?

By vinoth kumarFirst Published Apr 11, 2020, 1:58 PM IST
Highlights

கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை.  ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை என்றார். 

கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் :- கொரோனாவை விரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவி இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை.  ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை என்றார். விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. சிகிச்சை, மரணம், திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும் அம்மா உணவகங்களில் இரவில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை முழுவதும் கூடுதலாக 10 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன.

மேலும், செய்தித் தாள்களை பத்திரிகை நிறுவனங்கள் பிரிண்ட் செய்யும் பேதே கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நாளிதழ்கள் கொரோனா பாதிப்பு இல்லாமல் வழங்கப்படுவதாக பத்திரிக்கை நிறுவனங்களும் உறுதி கொடுத்திருக்கின்றன. மற்ற துறைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் பத்திரிக்கை நிறுவனங்கள் இதனை செய்து வருகின்றன.

இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளன. பொதுமக்களும் பார்த்திருப்பார்கள்.கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயாரிக்கப்படும் நாளிதழ்களை விநியோகிக்கும் நபர்களும் முகக்கவசம், கையுறை அணிந்துதான் செய்தித்  தாள்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

click me!