அன்புமணியை நீக்குவேன்! பேசும்போதே கண்கலங்கிய ராமதாஸ்! பாமகவினர் சோகம்!

Published : May 29, 2025, 12:08 PM IST
Ramadoss

சுருக்கம்

அன்புமணி மீது விமர்சனங்களை முன்வைத்த ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின்போது கண்கலங்கினார். தேவைப்படால் அன்புமணியை நீக்குவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Ramadoss-Anbumani clash: பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே மேடையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். மோதல் வலுத்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பேசிய அன்புமணி நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏன் ஏமாற்றப்பட்டேன்? என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை

அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என்று தெரிவித்த ராமதாஸ், ''புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு மேடையில் அநாகரிகமாக நடந்துகொண்டது யார்? முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தபோது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா? பனையூரில் உள்ள அலுவலகத்தில் என்னை வந்து சந்தியுங்கள் என்று அவர் (அன்புமணி) கூறியது சரியா?'' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அன்புமணியை அமைச்சராக்கியது தவறு

4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டதாக அன்புமணி மீது குற்றம்சாட்டிய ராமதாஸ் நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்பும் செயலாகும். உண்மையில் நான் தான் 35 வயதில் அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன். மேடை நாகரிகம், சபை நாகரிகம் தெரியாமல் ஆட்டத்தை தொடங்கியது அவர் தான் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணியை நீக்குவேன்

வளர்த்த கடாவே என் மார்பில் எட்டி உதைத்து விட்டது என்று கூறிய ராமதாஸ், அன்புமணி கூசாமல் பொய் சொல்வார். உறுப்பினர் பதவியில் இருந்து நான் நீக்குவதாக அவர் கூறியது பொய். தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல என்று தெரிவித்தார். மேலும் நான் யாரையும் சந்திக்கக் கூடாது என அன்புமணி எதிர்பார்ப்பதாகவும், தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என்று ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

கண்கலங்கிய ராமதாஸ்

இதற்கிடையே செய்தியாளர்கள் சந்திப்பின்போது தொண்டர்களின் கடிதத்தை படித்த ராமதாஸ் திடீரென கண்கலங்கினார். அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். ராமதாஸ் அன்புமணியின் மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது பாமக தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!