அதிர்ச்சி செய்தி.. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழப்பு.!

Published : May 11, 2021, 12:51 PM IST
அதிர்ச்சி செய்தி.. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழப்பு.!

சுருக்கம்

இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தியாகராய நகர் பகுதியை சேர்ந்த செவிலியர் சாமுண்டேஸ்வரிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

 இதனையடுத்து, அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து. திடீரென செவிலியருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர் தடுப்பூசி இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டார். எனினும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளது சக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!