சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியில்லை.. மருத்துவமனை டீன் தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 24, 2021, 10:55 AM IST
Highlights

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமைனயில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியில்லை. தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் பெறப்படுகிறது என மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமைனயில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியில்லை. தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் பெறப்படுகிறது என மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அலை மிகவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 14000ஐ நெருங்கிய வருகிறது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மருத்துவமனைகள் தேவையான ஆக்ஸிஜனை தனியார் நிறுவனங்களிடமே வாங்கு வரும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சொந்தமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளதாக சமூக வலைதளங்களில்  தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் தினமும் ஆக்சிஜன் பெறப்படுகிறது என மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது. அப்படி எந்த கட்டமைப்பும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

click me!