சென்னையில் பரவலாக மழை..! பொதுமக்கள் உற்சாகம்..!

By Manikandan S R SFirst Published Nov 9, 2019, 2:32 PM IST
Highlights

சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு புல்புல் என்று வானிலை மையம் பெயரிட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதே போல கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.

இதனிடையே இன்று இரவு புல்புல் புயல் கரையை கடக்கிறது. அதன்பிறகு அடுத்த வாரத்தில் சென்னையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு காற்றின் திசை மீண்டும் மாறி தென்மேற்கு கடலோரம் நோக்கி நகரும் என்றும் அதன் மூலம் வடமேற்கு திசையில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது சென்னையில் பலத்த மலை பெய்து வருகிறது. அசோக்நகர், வடபழனி, கே.கே நகர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!