Tamilnadu Rain: மீண்டும் மிரட்ட போகும் கனமழை.. எந்தந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

Published : Feb 10, 2022, 06:31 AM IST
Tamilnadu Rain: மீண்டும் மிரட்ட போகும் கனமழை.. எந்தந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

சுருக்கம்

வடகிழக்குப் பருவமழை முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டினாலும் பகல் நேரங்களில் பங்குனி வெயில் சுட்டெரித்து வருகிறது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை,  தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை முடிந்து பனி காலம் தொடங்கி விட்டது. இரவிலும் அதிகாலையிலும் குளிர் வாட்டினாலும் பகல் நேரங்களில் பங்குனி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தென் தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- இன்று முதல் தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 11-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மற்றும் கோவை, திருப்பூரிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

13-ம் தேதிகளில் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி  மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  மழைக்கு வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!