
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது பயன்பாட்டிற்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க;- தேசிய கொடி குறித்து பேசுவதற்கு உங்களுக்கு தகுதியே இல்லை.. கதர் சட்டையை கதறவிடும் நாராயணன் திருப்பதி.!
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏராளமான பொங்கல் பரிசு தொகுப்பு மீதமுள்ளது. இதன் தரத்தை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். அத்துடன் இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை அதிகாரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- 2022ம் ஆண்டு தமிழர்த் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க;- திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு.. கூலிப்படையை ஏவியது இவரா? வெளியான பரபரப்பு தகவல்..!
இவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டது போக கையிருப்பில் உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொருட்களின் தரத்தினை உறுதி செய்த பின்னர், அந்தந்த மாவட்ட ஆட்சியர், துணை ஆணையாளர் தெற்கு, வடக்கு ஆகியோரிடம் ஒப்படைத்து தீர்வு செய்யலாம் என அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர்கள்/துணை ஆணையாளர்(நகரம்) வடக்கு/தெற்கு அவர்களின் விருப்புரிமை அடிப்படையில் பொதுநல அரசு சார்/ அரசு சாரா அமைப்புகளில் தங்கி பயன்பெற்று வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகள், தொழிநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட குறிப்பாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள/குணமடைந்த மக்களின் குடும்பங்கள், அம்மா உணவகம்/சமுதாய சமயற்கூடங்கள் மற்றும் இன்னும் பிற பொது பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்திக்கொள்ளல்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.