குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவு... காவல்துறை அதிரடி..!

Published : Jun 21, 2019, 11:49 AM ISTUpdated : Jun 21, 2019, 06:35 PM IST
குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவு... காவல்துறை அதிரடி..!

சுருக்கம்

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா உன்று செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மேலும், "FREE BALL TOWER" எனும் விளையாட்டும் உண்டு. நீண்ட உயரத்திற்கு ராட்சத இரும்புத்தூண் அமைக்கப்பட்டு அதன் மத்தியில் இரும்பு தொட்டில் போல் ராட்டினம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அதில் அமர்ந்தவுடன் மேலே சென்று, வேகமாக கீழே  இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  

தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இங்குள்ள ராட்டினத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி உள்ளனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்த ராட்டினத்தின் இரும்பு கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. உயரமான பகுதியில் சென்றபோது இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். 

கீழ் பகுதியில் இருந்தபோது, ராட்டினத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பிகள் அறுந்து விழுந்ததால் லேசான காயங்களுடன் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உபகரணங்களுக்கு தரச்சான்று பெறும் வரை இயக்ககூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?