டிப்பர் லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி… - மகள் கண் முன் சோகம்

Published : Jun 20, 2019, 01:12 PM ISTUpdated : Jun 20, 2019, 01:29 PM IST
டிப்பர் லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை பலி… - மகள் கண் முன் சோகம்

சுருக்கம்

சாலையில் நடந்து சென்ற அரசு பள்ளி ஆசிரியை, மகளின் கண்முன்னே டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலையில் நடந்து சென்ற அரசு பள்ளி ஆசிரியை, மகளின் கண்முன்னே டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாரமங்கலம் அருகே மானத்தாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  ஆசிரியையாக வேலை பார்த்தவர் கிறிஸ்டி அகஸ்டா ராணி. நேற்று மாலை கிறிஸ்டி அகஸ்டா ராணி, வேலை முடிந்து தனது மகளுடன் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார்.

அப்போது, நங்கவள்ளியை நோக்கி சென்ற டிப்பர் லாரி, சாலையின் விளிம்பில் நடந்து சென்று கொண்டிருந்த கிறிஸ்டி அகஸ்டா ராணி மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும், அவரது மகள் கதறி அழுதார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், விபத்து நடந்த பகுதியில் போலீசார் விசாரித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு கட்டிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதில், பதிவான காட்சியை போலீசார் ஆய் செய்தனர்.

அதில், ஆசிரியை கிறிஸ்டி அகஸ்டா ராணி சாலையின் விளிம்பில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் ஆசிரியை மீது மோதியது. மேலும் அந்த இடத்தில் டிரைவர் பிரேக் பிடிக்க முயற்சித்ததாக தெரியவில்லை.

அந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது, சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது வேண்டுமென்றே மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தவேளையில், விபத்து ஏற்படுத்திய டிரைவரை, தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர். செம்மண்ணுடன் இருந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல் சூளைகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செல்லும் வேலையை செய்ததாக டிரைவர் கூறியதாக போலீசார் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?