குழந்தை வேண்டாம் என கூறிய கணவர்... மனவேதனையில் 2 மாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை..!

Published : Apr 15, 2021, 09:06 PM ISTUpdated : Apr 15, 2021, 09:08 PM IST
குழந்தை வேண்டாம் என கூறிய கணவர்... மனவேதனையில் 2 மாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை..!

சுருக்கம்

குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர் தற்போது குழந்தை வேண்டாம் என கூறியதால் மனமுடைந்து மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர் தற்போது குழந்தை வேண்டாம் என கூறியதால் மனமுடைந்து மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர் - ஈஸ்வரி தம்பதியரின் மகன் லோகுபிரபாகரன் (33). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சந்தியாக இரண்டு மாதம் கர்ப்பமடைந்தார்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சந்தியாவுக்கு காபி கொடுப்பதற்காக மாமியார் ஈஸ்வரி கதவைத் தட்டியபோது நீண்டநேரமாகியும் திறக்காததால், கணவர் சேகரிடம் கூறினார். விரைந்து வந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கே சந்தியா புடவையால் மின்விசிறியில் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார்.

இதனையடுத்து கதவை உடைத்து சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக செங்குன்றம் அடுத்த முண்டியம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சந்தியா உயிரிழந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், குடும்ப சூழ்நிலை காரணமாக கணவர் லோகு பிரபாகரன் தற்போது குழந்தை வேண்டாம் என அடிக்கடி கூறிவந்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. திருமணமாகி மூன்று மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!