திருப்போரூர் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல்ஹக்கீம் (30). ஆம்னி பஸ் டிரைவர். கடந்த 25ஆம் தேதி அப்துல்ஹக்கீம், திருப்போரூரில் உள்ள ஒரு ஆவின் பால் மையத்தில் லஸ்சி பாக்கட் வாங்கினார். அதில் உற்பத்தி தேதியை சரிபார்த்தபோது, உற்பத்தி தேதி ஜூலை 27ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், 25ம் தேதி விற்பனை செய்யப்பட்ட பாக்கட்டில் 27ம் தேதி தயார் செய்யப்பட்டதாக எப்படி போட முடியும் என, அங்கிருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு, ஆவின் நிர்வாகம் சப்ளை செய்யும் பொருட்களை நாங்கள் விற்பனை செய்கிறோம். அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என கடை ஊழியர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அப்துல்ஹக்கீம், ஆவின் நிறுவனத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதாக ஆவின் அதிகாரிகள் மழுப்பலான பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
தனியார் பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரமற்ற பால் பொருட்களை தயாரிப்பதாகவும், ஆனால் ஆவின் நிறுவனம் மக்களின் நலன் கருதி லாப நோக்கம் இல்லாமல் செயல்படுவதாகவும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆவின் பொருட்கள் இவ்வாறு தரமில்லாமல், உற்பத்தி தேதியை மாற்றி போட்டு கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்வது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.