பொங்கல் பண்டிகை... தமிழகத்தில் 3 நாட்களில் உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை... எவ்வளவு தெரியுமா?

By vinoth kumarFirst Published Jan 17, 2021, 12:55 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூ.589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூ.589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் ரூ.240 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்தித்தது. 

இதையடுத்து, மே மாதம் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய கடைகளில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. மேலும், பொங்கல் தினத்தன்று 700 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூ.589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 13, 14, 16 ஆகிய தேதிகளில் முறையே ரூ.147.75 கோடி, ரூ.269.43 கோடி, ரூ.172 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகையின் போது சென்னையில் 39 கோடி, திருச்சியில் 29 கோடி,  மதுரையில் 28 கோடி, சேலம் 26 கோடி, கோவையில் 24 கோடிமொத்தம் ரூ.147 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

ஜனவரி 14ம் தேதி தை பொங்கள் அன்று சென்னையில் 54 கோடி, திருச்சியில் 56 கோடி, சேலத்தில் 53 கோடி, மதுரையில் 55 கோடி, கோவையில் 50 கோடி என  மொத்தம் ரூ.269 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

ஜனவரி 16ம் தேதி காணும் பொங்கல் அன்று சென்னையில் 38 கோடி, திருச்சி 36 கோடி, சேலத்தில் 32 கோடி, மதுரையில் 34 கோடி, கோவையில் 30 கோடிக்கும் என மொத்தம் ரூ.172 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

click me!