இப்ப உடம்பு பரவாயில்லையா ஸ்டாலின்! டக்குனு போன் போட்ட பிரதமர் மோடி! அடுத்த நிமிடமே லைனுக்கு வந்த ராகுல் காந்தி!

Published : Jul 21, 2025, 09:14 PM ISTUpdated : Jul 21, 2025, 09:37 PM IST
PM Modi and Stalin

சுருக்கம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் நலம் விசாரித்தனர்.

PM Modi, Rahul Gandhi Inquired About CM Stalin's Health: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முதல்வருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதலமைச்சர் ஸ்டாலின் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றுல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வரின் உடல்நிலை பாதிப்புகளை கண்டறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டு இருந்தது.

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவரிடம் பேசி நலம் விசாரித்துள்ளார். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினிடம் போனில் பேசி உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆகியோரும் முதல்வருடன் தொலைபேசியில் நலம் விசாரித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் குணமடைய எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை

மேலும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எட்ப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இன்றைய தினம் நான் வரும்போது எனக்கு கிடைத்த செய்தி. திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

தமிமுன் அன்சாரி

இதேபோல் முதல்வர் குணமடைய வாழ்த்து தெரிவித்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, ''நதி போல ஒடும் பயணங்களும், அயராத பணிகளும், நமது முதல்வருக்கு சிறிது நலக்குறைவை ஏற்படுத்தியிருக்கிறது! விடாமல் வீசும் காற்று கூட மரத்தில் சிறிது ஓய்வு எடுக்கிறது! அசராமல் சிறகடிக்கும் பறவைகளும் சற்று இளைப்பாறுகிறது. ஓய்வின்றி உழைக்கும் திராவிட சூரியனுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை! இரண்டு நாள் கழிந்த பிறகு இரு மடங்கு பாய்ச்சலுடன் களத்துக்கு வாருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!