முன்னாள் முதல்வர் வீட்டை இடிக்க திட்டம்… - தற்போதைய முதலமைச்சர் அதிரடிமுடிவு

By Asianet TamilFirst Published Jun 25, 2019, 11:38 AM IST
Highlights

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையோரம் சொகுசு வீடு கட்டியுள்ளார். இந்த வீடு, அருகில் உள்ள மாநாட்டு மண்டபத்தை இடிக்க, தற்போதைய முதல்வர், ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார்.

ஆந்திர மாநில தலைநகர், அமராவதியில், கலெக்டர்கள் மாநாடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் பிரஜா வேதிகா அரங்கில் நேற்று மாநாடு நடந்தது.

அப்போது முதல்வர் ஜெகன் மோகன் பேசுகையில், முந்தைய அரசு கட்டிய, அங்கீகாரமில்லாத கட்டடத்தில் அமர்ந்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணா நதிக் கரையோரம் எந்த கட்டிடங்களும் கட்டக் கூடாது என ஒழுங்குமுறை விதிமுறைகள் கூறுகின்றன.

அதையும் மீறி, இந்த பிரமாண்ட கட்டிடத்தை, முந்தைய அரசு கட்டியுள்ளது.இதில், நாளை  போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. அதுதான், இங்கு நடக்கும் கடைசி கூட்டம். அதன்பின், இந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்படும்.

click me!