நான்கு நாட்களுக்கு பிறகு நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!!

Published : Sep 16, 2019, 01:13 PM ISTUpdated : Sep 16, 2019, 01:14 PM IST
நான்கு நாட்களுக்கு பிறகு நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!!

சுருக்கம்

கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்த்தப்படவில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும் காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும். 

கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயரவில்லை.

அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.85 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் 69.15 ரூபாயாக இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயர்த்தப்படாமல் இருந்தாலே போதும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!
Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?