தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Published : Sep 18, 2019, 11:48 AM ISTUpdated : Sep 18, 2019, 11:49 AM IST
தாறுமாறாக உயர்ந்துகொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று ஒரே நாளில் 25 காசுகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தது. எண்ணெய் கிடங்குகளில் ஏற்பட்ட பாதிப்பு நீங்க ஒரு சில வாரங்கள் ஆக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 5 ரூபாயில் இருந்து 6 ரூபாய் வரையில் விலை உயர இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 காசுகளுக்கு மேலாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.27  காசுகள் உயர்ந்து 75.26 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.26 காசுகள் உயர்ந்து 69.57 ரூபாயாக இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்கபட்டு வந்தது. அது மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!