உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்!!

Published : Sep 13, 2019, 12:55 PM IST
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்!!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும்  காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும்.

அது போல கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்ந்துள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் +0.07 காசுகள் உயர்ந்து 74.70 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் +0.09 காசுகள் உயர்ந்து 68.99 ரூபாயாக இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!