அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உண்டாக்கும் பெட்ரோல், டீசல் ரேட்..!

Published : Oct 01, 2019, 11:03 AM IST
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உண்டாக்கும் பெட்ரோல், டீசல் ரேட்..!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தது. தினமும் 25 காசுகளுக்கு மேல் விலை உயர்வு இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 14 காசுகள் அதிகரித்து 77.50 ரூபாயாக இருக்கிறது. அதே போல 1 லிட்டர் டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து 71.30 ரூபாயாக காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6 ரூபாய் வரை உயரக்கூடும் என்று தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!